News September 4, 2025

குமரி: சாட்சி சொன்ன பெண்ணை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

image

நித்திரவிளையை சேர்ந்தவர் விஜூராஜ்(42). 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தங்கையின் தோழியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மகளுக்கு ஆதரவாக சாட்சி சொன்னதால் பெண்ணின் தாயாரை கத்தியால் விஜூராஜ் வெட்டினார். இதில் நேற்று விஜூராஜூக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Similar News

News September 7, 2025

குமரி: ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலை

image

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<> விண்ணப்பிக்க இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. (வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 6, 2025

குமரி: முக்கிய கோவிலில் நேர மாற்றம்

image

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் வழக்கம் போல் நாளை (செப்.7) மாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்காக ஆதிகேசவப்பெருமாள் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் தீபாராதனை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என்றும், தொடர்ந்து கிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதிகளில் தீபாராதனை நடக்கும். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 6, 2025

குமரி: கடலில் பகுதியில் சடலம் மீட்பு

image

ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரது உடல் கடலில் இறந்த நிலையில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை மீட்டனர். இறந்து போன அந்த நபர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரி பள்ளத்திற்கு கடலோர காவல் குழும போலீசார் இன்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!