News September 4, 2025

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

Grindr போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மோசடி செய்பவர்கள் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம், பொருட்களை வழிப்பறி செய்கின்றனர். பொதுமக்கள் இதில் எச்சரிக்கையாக இருக்கவும், இத்தகைய குற்றங்களில் பாதிக்கப்பட்டால் 1930 கட்டணமில்லா எண் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News September 6, 2025

மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஓடக்கரை துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.6) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.

News September 6, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 5, 2025

நெல்லைக்கு மேலும் ஒரு பெருமை!

image

குலசையில் 2வது ஏவுதளம் அமைக்கும் நிலையில், பாளையங்கோட்டையில் புதிய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.7.12 கோடி செலவில் டெண்டர் கோரி விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது .இங்கே கட்டுப்பாட்டு மையம் அமைத்து அதில் விண்கலன்களை கண்காணிப்பது, கட்டளைகளை பிறப்பிப்பது போன்ற முக்கிய பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. நெல்லைக்கு மேலும் பெருமை சேர்க்கும் இந்த செய்தியை ஷேர் செய்யுங்க

error: Content is protected !!