News September 4, 2025

பெண் SP-ஐ பொமேரியன் நாய் என விமர்சித்த பாஜக MLA

image

பெண் எஸ்.பி.,யை ‘பொமேரியன் நாய்’ என கூறியதற்காக கர்நாடக பாஜக MLA ஹரீஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீபத்திய நிகழ்வில் பேசிய அவர், MLA-வான என்னை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொள்ளும் SP, ஷாமனூர் குடும்ப உறுப்பினர்களுக்காக வாசலில் பொமேரியன் நாய் போல் காத்திருக்கிறார் என்று சர்ச்சையாக பேசினார். மூத்த காங்., தலைவரான ஷாமனூர் சங்கரப்பா ஒரு MLA, அவரது மகன் அமைச்சர், மருமகள் MP என உள்ளனர்.

Similar News

News March 6, 2026

UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

image

தமிழக தேர்தல் தேதி மார்ச் 13-ல் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், 10 – 15-க்குள் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தலை நடத்தவும் ECI திட்டமிட்டுள்ளது. மேலும், மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News March 6, 2026

அணு ஆயுத போர்.. எஸ்கேப் பிளான் வைத்திருக்கும் டிரம்ப்

image

அணு ஆயுத போர் வெடித்தால் அதிலிருந்து தப்ப டிரம்ப் ஒரு பிளானை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அணுகுண்டு தாக்குதலை தாங்கும் அளவிற்கு USA-ல் 3 சீக்ரெட் பங்கர்கள் இருக்கிறதாம். 2-ம் உலகப்போருக்கு பிறகு கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த பங்கர்களை டிரம்ப் தற்கால வசதிகளுடன் அப்டேட் செய்து வைத்திருக்கிறாராம். போர் நேரத்தில் பங்கரில் இருந்தபடியே உத்தரவு வழங்கும் வசதிகளும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.

News March 6, 2026

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

image

<<19309113>>தங்கத்தை<<>> போன்றே வெள்ளி விலையும் இன்று (மார்ச் 6) குறைந்துள்ளது. 1 கிராம் ₹5 குறைந்து ₹290-க்கும், 1 கிலோ ₹5,000 குறைந்து ₹2.9 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!