News September 4, 2025
நக்சல் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது: அமித்ஷா

இந்தியாவில் நக்சல்களை ஒழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமித்ஷா, 2026, மார்ச் 31-க்குள் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என சூளுரைத்தார். மேலும் நக்சல் பயங்கரவாதிகள் சரணடையும் வரை (அ) கைதாகும் வரை (அ) ஒழிக்கப்படும் வரை PM மோடி தலைமையிலான அரசு ஓயாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
Similar News
News September 5, 2025
காலடி வைக்காதே.. EPSக்கு எச்சரிக்கை

EPS-ஐ எச்சரித்து தேனி மாவட்டம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போடியில் இன்று EPS பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் தேனியில் காலடி வைக்காதே என்று, குறிப்பிட்ட ஒரு பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில், எங்களை வஞ்சிக்கும் உங்களுக்கு இந்த மண்ணில் என்ன வேலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இன்று காலை EPS விவசாயிகளுடனான சந்திப்பை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
News September 5, 2025
SCIENCE: உங்களுக்கு இரண்டு இதயம் இருக்கு தெரியுமா?

கெண்டைக்கால் தசைகள், குறிப்பாக சோலியஸ் தசை தான் நமது உடலில் உள்ள 2-வது இதயம் என அழைக்கப்படுகிறது. இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரத்தம், புவி ஈர்ப்பு விசையால் கால்களில் தேங்கிவிடாமல் உடல் முழுக்க சீராக அனுப்பும் பணியை இது செய்கிறது. இதனால், இதயத்தின் வேலைப்பளு குறைவதோடு, அதன் ஆயுளும் நீள்கிறது. எனவே, இந்த 2ம் இதயம் சீராக இயங்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகிறது. SHARE.
News September 5, 2025
‘என் சாவுக்கு அவள் தான் காரணம்’

‘எனது மரணத்திற்கு அவளும், அவளது குடும்பமுமே காரணம்’. உ.பி. பிஜ்னோரில் போலீஸ் கான்ஸ்டபிள் அமித் குமார் தற்கொலைக்கு முயற்சிக்கு முன்பாக எழுதிய வரிகள் இவை. விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற அவரை, வீட்டின் உரிமையாளர் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அமித் தனது கடிதத்தில் குறிப்பிட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.