News September 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 448 ▶குறள்: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். ▶ பொருள்: குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
Similar News
News September 5, 2025
அதிமுக ஒரு உடைந்த கண்ணாடி: கே.பாலகிருஷ்ணன்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒரு உடைந்த கண்ணாடி என்றும் அதை ஒட்ட வைப்பது மிகக் கடினம் எனவும் கூறினார். அதிமுகவில் OPS, TTV, சசிகலாவை இணைத்தால் தனது பொதுச் செயலாளர் பதவிக்கு பிரச்னை வரும் என கருதி, EPS அவர்களை ஏற்க மாட்டார் என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
News September 5, 2025
இந்தியாவை இழந்துவிட்டோம்: டிரம்ப்

இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங், புடின், மோடி எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து, இந்தியா, ரஷ்யாவிற்கு வளமான வருங்காலம் அமையட்டும் என்றும் அவர் தனது Truth சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவும், ரஷ்யாவும் சீனாவின் பிடியில் சென்றுவிட்டதாக அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
காலடி வைக்காதே.. EPSக்கு எச்சரிக்கை

EPS-ஐ எச்சரித்து தேனி மாவட்டம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போடியில் இன்று EPS பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் தேனியில் காலடி வைக்காதே என்று, குறிப்பிட்ட ஒரு பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில், எங்களை வஞ்சிக்கும் உங்களுக்கு இந்த மண்ணில் என்ன வேலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இன்று காலை EPS விவசாயிகளுடனான சந்திப்பை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.