News September 4, 2025

நீலகிரி: சோலாடா பள்ளி தலைமை ஆசிரியைக்கு விருது

image

தமிழக கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, இந்த ஆண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பியூலா ரோஸ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இந்த உயரிய விருது, அவரது சிறப்பான கல்விச் சேவைக்காக வழங்கப்படுகிறது.

Similar News

News September 5, 2025

நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை பிரச்சனையா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு கிளிக்<<>> செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

News September 5, 2025

நீலகிரி ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது

image

சென்னை அண்ணா நூலக அரங்கில் இன்று நடைபெற்ற கல்வி துறை விழாவில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திருமதி எம். சித்ராவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

News September 5, 2025

நீலகிரி: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

image

நீலகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!