News September 4, 2025

போராடி தோல்வியை தவிர்த்த இந்திய அணி

image

ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர் 4 சுற்றில் தென் கொரியாவிடம் இந்தியா போராடி தோல்வியை தவிர்த்தது. பிஹாரில் நடந்த போட்டியில் ஹர்திக் சிங் 8வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அதன் பிறகு தென் கொரியா இரண்டு கோல் அடித்து இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. பல வாய்ப்புகளை தவற விட்ட இந்தியா ஒரு வழியாக 52வது நிமிடத்தில் கோல் அடிக்க போட்டி 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. இந்தியா நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.

Similar News

News December 10, 2025

8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் காலை 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15-ம் தேதி வரை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

உலகின் டாப் 10 அழகான நடிகைகள்

image

2025 நிறைவடைய உள்ள நிலையில், IMDB பட்டியலிட்டுள்ள இந்த ஆண்டின் டாப் 10 அழகான நடிகைகளை இங்கு பார்க்கலாம். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள நடிகைகளின் அழகை அலசி ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

News December 10, 2025

ஆணவக்கொலை வழக்கை இழுத்தடிக்கும் அரசு: கௌசல்யா

image

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கௌசல்யா குற்றஞ்சாட்டியுள்ளார். கொலைக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து SC-யில் மேல்முறையீடு செய்தோம். அங்கு துணையாக நிற்க வேண்டிய அரசு மெத்தனப்போக்கு காட்டியது. நீதி கிடைத்தால் சாதிய வாக்குகள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வழக்கை இழுத்தடிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!