News September 4, 2025
ஹீரோயின்களுக்கு இதுதான் நிலை: தனுஷ் பட நடிகை

ஹிந்தியில் தனுஷுடன் இணைந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடித்து வரும் கீர்த்தி சனோன், பாலிவுட்டில் நடிகர்களின் ராஜ்ஜியம் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஷூட்டிங்கில் நடிகர் வருகைக்காக நடிகைகளும் அதிகாலை முதலே காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், நடிகர்களை விழுந்து விழுந்து கவனிக்கும் தயாரிப்பாளர்கள், நடிகைகளை கண்டுகொள்வதே கிடையாது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
செல்போன் ரீசார்ஜ் 1 மாதம் இலவசம்

ஜியோவின் 9-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி <<17616667>>பல்வேறு ஆஃபர்கள்<<>> அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ₹349 ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆஃபர் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஓராண்டாக இந்த பிளானில் ரிசார்ஜ் செய்தவர்கள், MY JIO ஆப்பில் இன்று முதல் 7-ம் தேதிக்குள் இந்த முறை இலவசமாக ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டத்தில் 28 நாள்களுக்கு தினமும் 2GB, 100 SMS, Unlimited calls சேவைகளை பெறலாம்.
News September 5, 2025
மீண்டும் கிரிக்கெட்டில் கால் பதிக்கும் ராஸ் டெய்லர்!

கிரிக்கெட்டிலிருந்து ரிட்டயர்டான நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர்(41) T20 WC-ல் விளையாட இருக்கிறார். ஆனால் நியூசிலாந்துக்காக அல்ல. அவர் குடியுரிமை பெற்றுள்ள சமோவா நாட்டுக்காக. அந்த அணி, Asia-East Asia-Pacific பிரிவில் தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணிக்காக, 450 சர்வதேச போட்டிகளில் 18,199 ரன்களை குவித்துள்ள அவர், 2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
News September 5, 2025
அதிமுக – பாஜக கூட்டணி மூழ்குகிறது: காங்கிரஸ்

அதிமுக – பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள், கெடு கொடுத்துவிட்டதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அந்த கூட்டணியிலிருந்து ஏற்கெனவே OPS, டிடிவி தினகரன் விலகிய நிலையில், இப்போது செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறியுள்ளார். அந்த கூட்டணி மூழ்குகின்ற கப்பல் என்பதால் ஒவ்வொருவராக விலகி செல்வதாகவும் பாஜக, அதிமுகவை அழித்துவிடும் எனவும் சாடியுள்ளார்.