News September 3, 2025
BREAKING: ஜிஎஸ்டி வரம்பில் 12%, 28% நீக்கம்

ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனி 5%, 18% வரம்புகள் மட்டுமே தொடரும் என்றும், சிறப்பு வரி விதிப்பாக 40% வரம்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த மாற்றம் செப்.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
பெரம்பலூர்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

குன்னம் தொகுதி, செந்துறை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 20-கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திமுக செந்துறை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் பொன்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 6, 2026
650 காலியிடங்கள், ரிசர்வ் வங்கியில் பணி..APPLY NOW

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் பல்வேறு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு (650 காலியிடங்கள்) தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கான தேர்வு, நாடு தழுவிய அளவில் இரண்டு கட்டமாக (ஆன்லைன் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு) நடைபெறும். விண்ணப்பிக்க மற்றும் தேர்வு கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த மார்ச் 8-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு www.rbi.org.in-ல் பார்க்கவும்.
News March 6, 2026
விஜய்- த்ரிஷா.. மோசமாக விமர்சித்த நடிகை!

திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்ததை நடிகை சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார். ‘இது சரியானது இல்லை. மனைவியின் துயரத்தை புறக்கணிக்க முடியாது, கூடாது; நீண்ட கால ரசிகையாக இந்த நேரத்தில் தான் மிகவும் ஏமாற்றமடைவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக, விஜய் மீது பல விஷயங்களில் விமர்சனங்கள் எழுந்தபோது அவருக்கு சனம் ஷெட்டி அவருக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


