News September 3, 2025

வேலூர்: WFH ரூ.30,000 சம்பளத்தில் வேலை

image

வேலூர் மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து <>இந்த லிங்கில்<<>> பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இந்த செம வாய்ப்பை மிஸ் பண்ணாம நண்பர்களுக்கும் பகிருங்க

Similar News

News December 31, 2025

வேலூர்: செல்போனால் வந்த வினை – மாணவி விபரீத முடிவு!

image

வேலூர்: தார்வழி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் பிரியாமணி (17). அரியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் வீட்டில் செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2025

வேலூர்: ஒரே ஆண்டில் ரூ.19 கோடி மோசடி!

image

வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பு ஆண்டில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 3,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 519 மனுக்கள் பணம் இழப்பு இல்லாத மனுக்கள் ஆகும். மீதமுள்ள 2,631 பேர் ரூ.19 கோடியே 41 லட்சத்தை இழந்துள்ளனர். இதில் பல வங்கி கணக்குகளில் உள்ள 4 கோடியே 18 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரம் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூரில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவு 10 முதல் காலை 6 மணி வரை வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.30) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!