News September 3, 2025
சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.
Similar News
News September 5, 2025
சேலம்: NO EXAM அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 5, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

வரும் செப்.06 முதல் செப்.27 வரை சேலம் வழியாக செல்லும் வகையில் ஹுப்ளி-ராமநாதபுரம்-ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரயில்களை (07355/07356) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வாரத்தில் சனிக்கிழமைதோறும் ஹூப்ளியில் இருந்து ராமநாதபுரத்திற்கும், மறுமார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமைதோறும் ராமநாதபுரத்தில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று செல்லும்.
News September 5, 2025
மிலாது நபி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திரன்!

சேலம்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,இறை ஆசியும்,நபியின் ஒளி,கருணை, இரக்கம் நெஞ்சில் வேரூன்றி நல்லொழுக்க வழியில் சென்று துன்பங்கள் அகன்று, அமைதி, அன்பு, நன்மைகள் பெருகி ஒற்றுமையுடன் மகிழ்ந்திருக்க, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.