News April 10, 2024
IPL: கடைசி வரை போராடிய ஷஷாங்க் சிங்

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, ஷஷாங்க் சிங் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 6 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய அவர், 46*(25) ரன்கள் குவித்து அசத்தினார். ஐபிஎல் ஏலத்தில் தெரியாமல் வாங்கப்பட்ட இவர், அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Similar News
News March 17, 2026
ELECTION: தேர்தலில் தோல்வியடைந்த முதல்வர்கள்!

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற 16 பேரவைத் தேர்தல்களில் இதுவரை 2 முதல்வர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். 1967-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இவர் தான் தற்போது வரை தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வர் ஆவார். அதேபோல் 1996-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுகவின் EG சுகவனத்திடம் தோல்வியடைந்தார்.
News March 17, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

KYC அப்டேட்டால் <<19398205>>கேஸ் சிலிண்டர்<<>> புக் செய்பவர்களிடையே எழுந்துள்ள குழப்பத்திற்கு மத்திய அரசு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஏற்கெனவே KYC அப்டேட் செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் மட்டுமே KYC பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை KYC அப்டேட் செய்யுமாறு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
News March 17, 2026
தவெக வேண்டாம்.. பாஜக முடிவில் மாற்றமா?

அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்கும் முடிவை பாஜக தலைமை கைவிட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் 2026 தேர்தலில் தவெக தனித்தே களம் காணும் என்பதும், 4 முனைப் போட்டிதான் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?


