News September 3, 2025
ராமநாதபுரம்: ஆட்சியர் தகவல் அறிவிப்பு

ராமநாதபுரம், (செப்.9) முதல் அக்டோபர் 31 வரை 163-BNSS தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு நாள் (செப்.11) மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை (அக்.28,30) காரணமாக, சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக இந்த உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
ராமநாதபுரம்: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
ராமநாதபுரம்: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <
News December 7, 2025
ராமநாதபுரத்தில் 905 பேர் பாதிப்பு.. மக்களே உஷார்

ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் 12 பேர், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் 33 பேர் என 45 பேர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 904 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராம்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள், பள்ளங்களில், தேங்கிய மழைநீரில் கொசு உற்பத்தியாவதால் வரும் நாட்களில் நோய் பரவும் அபாயம் உள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


