News September 3, 2025
திருப்பத்தூரில் மதுக்கடைகள் விடுமுறை

திருப்பத்தூரில் வருகிற 5 ஆம் தேதி மீலாடி நபி விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், சொகுசு விடுதிகளுக்கு விடுமுறை அளிக்க ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி உத்தரவிட்டார். இதனை மீறி மது விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு இன்று (செப்-3) வெளியானது.
Similar News
News September 5, 2025
திருப்பத்தூர்: முன் விரோத சண்டையில் ஒருவர் கைது

ஆம்பூர் தாலுகா மோதகப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயது (28) கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது அதே பகுதியை சேர்ந்த துர்கேஷ் வயது (20) முன் விரோதம் காரணமாக கடந்த 1 தேதி சரமாரியா தாக்கியதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உமாநாத் போலீசார் வழக்கு பதிவு செய்து (இன்று காலை செப் 5) துர்கேஷை கைது செய்தனர்.
News September 5, 2025
திருப்பத்தூர்: ரூ,1,50,000 சம்பளத்தில் அரசு வேலை!

திருப்பத்தூர்: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு இந்த<
News September 5, 2025
திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி

நாட்றம்பள்ளி சேர்ந்த அகிலன் இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் இவருக்கு திருமணம் ஆகி மனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செப்-03 விடுமுறைக்கு வந்தவர், நேற்று நாட்டறம்பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.