News September 3, 2025

கடலூர் மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

image

கடலூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 5, 2025

தொலைதுார கல்வி சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதுாரம் மற்றும் இணையவழிக் கல்வி மையம் சார்பில் 5 இளங்கலை மற்றும் 20 முதுகலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.மேலும் 12 பட்டயப் படிப்புகள், 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 80 தரச் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை அக்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

கடலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

கடலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 5, 2025

கடலூர்: 6 போலீசார்கள் பணியிடை நீக்கம்

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீசார்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் கார்த்திக் ஆகிய 6 பேரையும், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி உமா பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

error: Content is protected !!