News September 3, 2025
கரூரில் ரூ.26.66 கோடி மதிப்பில் நிதியுதவி

கரூரில் கடந்த 4 ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 40,825 கர்ப்பிணிப் பெண்களுக்காக ரூ.26.66 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணித் தாய்மார்கள் கருத்தரித்த 12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
Similar News
News November 14, 2025
கரூர் அருகே விபத்து இளைஞர் பலி!

புகழூர் அருகே சின்ன வாங்கலம்பாளையம், கச்சைகட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (29). இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பால்வார்பட்டி பிரிவு ரோடு அருகே, தனது டூவீலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, தான்தோன்றிமலையை சேர்ந்த திருமாவளவன் (45), என்பவர் ஓட்டி வந்த லாரி, டூவீலர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். தென்னிலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 14, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட் தேர்வு) நவ.15, 16 நடக்கிறது. இதில், 5 மையங்களில் நாளையும், 19 தேர்வு மையங்களில் நாளை மறுநாளும் நடக்கிறது. மையங்களில் முறையே, 1,254 மற்றும், 5,228 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை, 9:30 மணிக்குள் மையத்தில் இருக்க வேண்டும் அதற்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாளை (14.11.25) காலை 10 மணி அளவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


