News September 3, 2025
BREAKING: உதயநிதி மகன் இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு

ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவன CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த தகவல் உறுதியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லிக்கடை’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில், ரெட் ஜெயண்ட் மூவிஸ், இன்பன் உதயநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
BREAKING: இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் வார்னிங்

கட்சியில் இருந்து விலகியவர்களை(OPS, சசிகலா, TTV) மீண்டும் இணைக்க EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். 2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News September 5, 2025
BIG BREAKING: முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்

2017-க்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த அதிமுக, கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள், எவ்வித நிபந்தனைகளும் இன்றி கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும், விரைந்து முடிவுகளை எடுக்கவில்லை என்றால் ஒன்றிணைக்கும் நாங்கள் இணைந்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News September 5, 2025
EPS பெயரை கூற மறுத்த செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து யாரேனும் விலகினால் அவர்களது வீடு தேடிச் சென்று MGR சமாதானம் செய்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-ல் கட்சிக்கு கடுமையான சோதனைகள் ஏற்பட்டபோது, முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்தோம் என EPS பெயரை கூறாமல் தனது கருத்தை கூறினார். அதிமுக உடையக் கூடாது என்பதற்காக தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தியாகம் செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.