News September 3, 2025
GST 2.0: இந்த பொருள்களின் விலை வெகுவாக குறையும்

இன்றைய GST கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. *1200cc-க்கு குறைவான கார்கள், 350cc-க்கு குறைவான பைக்குகளுக்கான வரி 28%-ல் இருந்து 18% குறைப்பு. *கேன்சர் மருந்துகளுக்கு வரிவிலக்கு. அத்தியாவசிய மருந்துகளுக்கு 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு. *உணவுப்பொருள்கள், உரங்களுக்கு 5% ஆக குறைப்பு. *ஜவுளி, சினிமா டிக்கெட், ஸ்டேஷனரி பொருள்களுக்கு 5% ஆக குறைக்கப்படும்.
Similar News
News March 13, 2026
பாகிஸ்தான் வீரரால் SRH அணிக்கு குவியும் எதிர்ப்பு!

தி ஹண்ட்ரட் தொடருக்கான ஏலத்தில் <<19367924>>பாக்., வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது<<>> அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. SRL அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு சொந்தமானது. அப்ராரின் ஏலத்தை ஒருபக்கம் சிலர் பாராட்டினாலும், தேசிய உணர்வை அவமதித்ததாக கூறி #ShameOnSRH, #BoycottSunrisers போன்ற ஹேஷ்டேக்குகள் SRH-க்கு எதிராக SM-ல் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News March 13, 2026
இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
News March 13, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.


