News September 3, 2025
சென்னையில் இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை பெற நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது, சமூக நல கூடங்களை புக் செய்வது, இறப்பு சான்றிதழ், மாநகராட்சி சார்ந்து புகார் செய்வது உள்பட 34 சேவைகளை <
Similar News
News September 5, 2025
எண்ணூர் அருகே பயங்கர விபத்து

எண்ணூர், கத்திவாக்கம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மாநகர பேருந்து ஓட்டுனர் சங்கர் மற்றும் பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து எண்ணூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் பாபு தலைமறைவான நிலையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News September 5, 2025
சென்னை: EB-ல் வேலை.. ரூ.59,000 வரை சம்பளம்

▶️தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ▶️இதற்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணப்பிக்க 02.10.25 கடைசி ஆகும். ▶️இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <
News September 5, 2025
சென்னை: பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை

2022-ல் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பள்ளி வேன் ஓட்டுநர் சத்தியராஜ் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சத்தியராஜுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.