News September 3, 2025
பழங்குடியினருக்குப் பட்டா வழங்காததால் போராட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 15 பேருக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் 13 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள இரு பேருக்கு சாதிய உள்நோக்கத்தோடு வட்டாட்சியர் துறை செல்வம் பட்டா வழங்க மறுத்து வருகிறார் என கூறி பாதிக்கப்பட்டோர் இன்று(செப்.3) திண்டிவனம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக காத்திருந்தனர்.
Similar News
News September 10, 2025
பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி எம்எல்ஏ மீது 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடந்து வரும் நிலையில் நேற்றுஓய்வு பெற்ற டிஎஸ்பிவிஜயராகவன் சாட்சியம்அளித்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
News September 10, 2025
விழுப்புரம்: மின் துறையில் SUPERVISOR வேலை!

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும்.<
News September 10, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <