News September 3, 2025
சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீது விரைவு விசாரணை!

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனு மீதான விசாரணை நடத்தினார். இந்த முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 5, 2025
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

மிலாது நபி, ஓணம் தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை! கருப்பூர், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, வைகுந்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
News September 5, 2025
சேலம் செப்.6 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள்

சேலம் செப் 6 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி தொங்கும் பூங்கா திருமண மண்டபம்▶️ சன்னியாசி குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ▶️தாரமங்கலம் பொன்னுசாமி திருமண மண்டபம் தாரமங்கலம்
▶️ வனவாசி முருகேசன் முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை ▶️கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுப்பாளையம் ▶️பனமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் ▶️சங்ககிரி பார்வதி பாய் திருமண மண்டபம்
News September 5, 2025
சேலம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

சேலம் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 250 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. <