News September 3, 2025
CM ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குறுதிகளை உண்மையாகவே திமுக அரசு நிறைவேற்றியிருந்தால் அவற்றுக்கு ஒதுக்கிய நிதி, பயனடைந்தோர் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டிருக்க வேண்டும் என அன்புமணி தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் CM சொல்லும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 5, 2025
FLASH: ரோடு ஷோ நடத்திய செங்கோட்டையன்

கோபியில் இன்னும் சற்று நேரத்தில், செய்தியாளர்களை சந்திக்க உள்ள செங்கோட்டையன் பிரமாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அவரது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் வரை, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்களில் EPS படம் இடம் பெறவில்லை. செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
News September 5, 2025
சீமானுக்கு வெள்ளைக்கொடி காட்டும் விஜய்?

பிரஸ்மீட், மாநாடு என எல்லா இடத்திலும் விஜய்யை ஆக்ரோஷமாக அட்டாக் செய்து வருகிறார் சீமான். ஆனால், திமுக, பாஜகதான் தங்கள் எதிரிகள் என தெளிவாக இருக்கும் விஜய், சீமானை பதிலுக்கு சீண்ட வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறாராம். அதோடு, சீமானை நேரில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பனையூர் வட்டாரத்தினர் சொல்கின்றனர். வெள்ளைக்கொடி பறக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
News September 5, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.5) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,865-க்கும், ஒரு சவரன் ₹78,920-க்கும் விற்பனையாகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று சவரனுக்கு ₹80 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தை கண்டு, சவரன் ₹79,000-ஐ நெருங்கியுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹137-க்கு விற்பனையாகிறது.