News September 3, 2025
தங்கம் 1 சவரன் ₹32 ஆயிரம் மட்டுமே.. 9 காரட் தெரியுமா?

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவது பலரையும் 9 காரட் தங்கத்தின் பக்கம் மக்களை திருப்பியுள்ளது. இதற்கு அண்மையில்தான் ஹார்மார்க் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 9 காரட்டில் 37.5% தங்கம் உள்ளது. இதன் மதிப்பு ஒரு சவரன் ₹31,800 மட்டுமே. இதனை மறுவிற்பனை செய்யும்போது, தற்போதைய மதிப்பை பொறுத்து பணம் கிடைக்கும். அதேநேரத்தில், 9 காரட் நகைகளை வைத்து வங்கிகளில் கடன் பெறுவது சிரமம்தான். SHARE IT.
Similar News
News September 7, 2025
ராகுலை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ED சம்மன்

ராகுல் காந்தி UK குடியுரிமை பெற்றிருப்பதாக, கர்நாடகாவை சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ், அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான ஆவணங்களை வரும் 9-ம் தேதி நேரில் வந்து வழங்குமாறு விக்னேஷுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ராகுல் இந்திய தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என விக்னேஷ் வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
News September 7, 2025
வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண் இயக்குநர்

82-வது வெனிஸ் திரைப்பட விருது விழாவில், இந்தியாவின் அனுபர்னா ராய் கௌரவமிக்க விருதைப் பெற்றுள்ளார். ‘Songs of Forgotten Trees’ படத்திற்காக Orizzonti பிரிவில் விருதை பெரும் முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நவீன கலை மற்றும் டிரெண்டை உருவாக்கும் முதல் பட இயக்குநருக்கு Orizzonti பிரிவில் இந்த சர்வதேச விருது வழங்கப்படும். இரு பெண்களுக்கு இடையிலான உறவுச் சிக்கலை இப்படம் பேசுகிறது.
News September 7, 2025
பாஜக நுழைந்த மாநிலம் உருப்படாது: ப.சிதம்பரம்

தமிழகத்திற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் போது நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டை பாஜகவால் செயல்படுத்த முடியாது என்றாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்ற பழமொழி போல, பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது என விமர்சித்துள்ளார்.