News September 3, 2025
புதுகை: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

புதுகை மக்களே..சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
புதுகை: வாகனம் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே குமரப்பன் வயல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதில் அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் அளித்ததன் பெயரில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து மீமிசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
புதுகை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், முதலமைச்சர் எதிர்வரும் 10.11.2025 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
News November 4, 2025
புதுகையில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

புதுகையில் மாவட்டத்தில் 83 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<


