News September 3, 2025

BREAKING: அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS.. புதிய தகவல்

image

சசிகலா, OPS உள்ளிட்டவர்களை சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டுவர செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், சசிகலாவை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, இன்றைய பேட்டியில் அவர் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் வலுத்துள்ளது. செப்.5-ல் தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க உள்ளதாக அவர் கூறுவது, ஒன்றுபட்ட அதிமுகவைத்தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News September 5, 2025

என்ன பேசப்போகிறார் செங்கோட்டையன்?

image

TN அரசியல் களம் காலை 9.30 மணிக்காக காத்திருக்கிறது. குறிப்பாக, அதிமுகவினர் பெரும் தகிதகிப்பில் உள்ளனர். 1.மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஒன்றிணைப்பு, 2.பாஜகவுடன் கூட்டணி வேண்டாம், 3.அரசியலை விட்டு விலகுகிறேன். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத்தான் செங்கோட்டையன் பேசப்போவதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதில், எந்த முடிவை அவர் எடுத்தாலும், EPS-க்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. என்ன பேசுவார்?

News September 5, 2025

சருமத்தை அழகாக்கும் ‘கொய்யா இலை தேநீர்’

image

செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், எடை மேலாண்மை செய்யவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொய்யா இலை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எப்படி செய்வது:
தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து, அதில் 4-5 புதிய கொய்யா இலைகளைச் சேர்க்கவும். 2- 4 நிமிடங்கள் வரை, இதனை கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் சேர்த்தால் ‘கொய்யா இலை தேநீர்’ ரெடி. SHARE IT.

News September 5, 2025

கட்சியில் வாரிசுக்கு புதிய பொறுப்பு.. வெடித்த சர்ச்சை

image

பாஜகவில் விளையாட்டு பிரிவு பொறுப்பாளராக நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வரும் பாஜக, இந்த நியமனத்தை வாரிசு அரசியல் இல்லை என மறுக்கப்போகிறதா இல்லை மறைக்கப்போகிறதா? என DMK, NTK, TVK உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!