News September 3, 2025

கோவையில் செப்.11-ல் மாபெரும் கல்விக் கடன் முகாம்!

image

கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம், வரும் செப்.11ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பீளமேடு பிஎஸ்ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே பான், ஆதார், மதிப்பெண் பட்டியல், வங்கி விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுளளது. SHARE பண்ணுங்க!

Similar News

News September 5, 2025

கோவையில் ஒரு டீ ரூ.20, காபி ரூ.26: பொதுமக்கள் அதிர்ச்சி!

image

கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட பேக்கரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த சங்கத்துக்கு உட்பட்ட பேக்கரிகளில் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முடிவு செய்தனர். இதன்படி பேக்கரிகளில் இதுவரை ரூ.15 க்கு விற்கப்பட்டு வந்த டீயின் விலை ரூ.20 ஆகவும், ரூ.20க்கு விற்கப்பட்டு வந்த காபியின் விலை ரூ.26 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

News September 5, 2025

கோவை: பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வேண்டுமா?

image

கோவை மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு கோவையிலுள்ள அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 22.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 5, 2025

கோவை: 2 வழித்தடத்தில் மெட்ரோ!

image

கோவையில் முதல் மெட்ரோ ரயில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் வரையிலும், கோயம்புத்தூர் சந்திப்பு முதல் வலியம்பாளையம் பிரிவு வரையும் இயக்கப்படும் என கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் இன்று தகவல் தெரிவித்துள்ளார். முதல் மெட்ரோ ரயில் செயல்படுத்தப்படும் இரண்டு வழித்தடங்களின் நீளம் 40 கி.மீ : இதற்காக செய்யப்பட உள்ள செலவு ரூ.10,740 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!