News September 3, 2025

ஈரோடு: 108 ஆம்புலன்சில் வேலை வாய்ப்பு முகாம் !

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி. ஹாலில் செப்.7-ம் தேதி 108 ஆம்புலன்சில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாத ஊதியம் ரூ.21120 வழங்கப்படுகிறது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 5, 2025

ஈரோட்டில் இலவசமாக செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி

image

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக “இலவசமாக செல்போன் பழுது நீக்குதல் (Cellphone Repairs & Service) ” 08-09-2025 முதல் 14-10-2025 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது, பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம், பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

News September 5, 2025

ஈரோடு: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். யாருக்காவது பயன்படும் ஷேர் பண்ணுங்க.!

News September 5, 2025

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

image

உலக முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர், ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர், மாநகராட்சி துணை மேயர் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

error: Content is protected !!