News September 3, 2025
52 வயது காதலியை கொலை செய்த 26 வயது காதலன்

ஒன்றரை வருடமாக இன்ஸ்டாவில் காதலித்த பெண்ணை முதல்முறையாக நேரில் சந்தித்த போது, உ.பி.யை சேர்ந்த அருண்(26) அதிர்ச்சியடைந்துள்ளார். இன்ஸ்டா Filter-ஐ பயன்படுத்தி, தனது வயதை குறைத்து காட்டிய ராணிக்கு(52), 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்த பிறகும், அவருடன் தனிமையில் இருந்தது மட்டுமின்றி, ₹1.5 லட்சத்தையும் கறந்துள்ளார். ஆனால், ராணி தன்னை கல்யாணத்திற்கு வற்புறுத்தவே, அவரை துப்பாட்டாவால் கொலை செய்துள்ளார்.
Similar News
News September 5, 2025
சருமத்தை அழகாக்கும் ‘கொய்யா இலை தேநீர்’

செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், எடை மேலாண்மை செய்யவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொய்யா இலை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எப்படி செய்வது:
தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து, அதில் 4-5 புதிய கொய்யா இலைகளைச் சேர்க்கவும். 2- 4 நிமிடங்கள் வரை, இதனை கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் சேர்த்தால் ‘கொய்யா இலை தேநீர்’ ரெடி. SHARE IT.
News September 5, 2025
கட்சியில் வாரிசுக்கு புதிய பொறுப்பு.. வெடித்த சர்ச்சை

பாஜகவில் விளையாட்டு பிரிவு பொறுப்பாளராக நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வரும் பாஜக, இந்த நியமனத்தை வாரிசு அரசியல் இல்லை என மறுக்கப்போகிறதா இல்லை மறைக்கப்போகிறதா? என DMK, NTK, TVK உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 5, 2025
27 தமிழக அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

மத்திய, மாநில அமைச்சர்கள் 643 பேரில் 302 பேர் (47%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 29 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன. தமிழகத்தில் 27 அமைச்சர்கள் மீதும், அதிகபட்சமாக தெலுங்கு தேசம் கட்சியின் 23 அமைச்சர்களில் 22 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.