News September 3, 2025

சிவகாசியில் மட்டும் புதிய வசதி அறிமுகம்

image

சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டுக்கான முன்பதிவு வசதிக்காக, தனி கவுன்டா் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், தத்கல் முன்பதிவுக்கான பயணச் சீட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலக வேலை நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். தென் மாவட்டங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Similar News

News September 7, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் பீகார் வாலிபர் உயிரிழப்பு

image

பீகார் மாநிலம், சஹோரா பகுதியைச் சேர்ந்த தூரியாமான்ஜி, சீல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 7, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

விருதுநகர் மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறியலாம். SHARE IT

News September 7, 2025

ஸ்ரீவியில் ஆட்டோ ஏற்றி கொலை செய்த கொடூரம்

image

ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரைகுளம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பொன்ராஜ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்து சென்ற செந்தில்குமார் மீது பொன்ராஜ் ஆட்டோவை ஏற்றி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!