News September 3, 2025
BREAKING: உலகம் முழுவதும் முடங்கியது.. பயனர்கள் அவதி

OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பயனர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். தினந்தோறும் உலகம் முழுவதும் 10 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இதனை நெட்டிசன்கள் கிண்டலாக, ChatGPT டீ பிரேக் எடுக்க சென்றுவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களுக்கு வேலை செய்யுதா ChatGPT?
Similar News
News September 7, 2025
TN-ல் பல ஆயிரக்கணக்கானோர் ஆதரவு: செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் குறிப்பாக ஈரோட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான MGR, ஜெயலலிதாவின் தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி என்றார். கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு, அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 7, 2025
தமிழகத்துக்கு அருகே வரும் இந்தியாவின் முதல் Disney world?

ஆந்திராவை உலக சுற்றுலா தளமாக மாற்றும் முனைப்பில் இருக்கிறார் CM சந்திரபாபு நாயுடு. இதன் ஒரு பகுதியாக இந்தியர்கள் பலர் செல்ல ஆசைப்படும் Disney world-ஐ ஆந்திராவின் அனந்தபூரில் கட்டமைக்க அவர் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, Walt Disney குழுவோடு ஆலோசனைகளும் நடந்துவருகிறதாம். இதுவரை USA, பிரான்ஸ், ஜப்பான், சீனாவில் மட்டுமே Disney world இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 7, 2025
இந்திய டெஸ்ட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர்?

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான, 2 Multi-Day போட்டிகளுக்கான இந்திய A அணியின் <<17631676>>கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் <<>>அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2 டெஸ்ட் போட்டிகளில், ஷ்ரேயஸ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய கருண் நாயருக்கு பதில் அவர் அணியில் சேர்க்கப்படலாம். ஷ்ரேயஸ் நல்ல சாய்ஸா?