News September 3, 2025

2024-க்குள் இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை

image

ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து 2024 டிச., 31-க்குள் இந்தியா வந்த ஹிந்து, கிறிஸ்தவர், ஜெயினர், சீக்கியர்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் நாட்டில் தங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேற்கூறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு அமலான CAA படி, 2014-க்குள் இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும் என்பது மாறி தற்போது 2024-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

படுத்த படுக்கையில் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே

image

தனக்கு கிரேடு 1 மார்பகப் புற்றுநோய் உள்ளதாக நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் படுக்கையில் இருந்தவாறான போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ஆபரேஷனுக்குப் பிறகு அனைவரின் ஆதரவோடும் உலகை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்கின்றனர். இவர் ‘தக் லைஃப்’ படத்தில் கனிகா என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

News March 4, 2026

மாதம்பட்டி ரங்கராஜிடம் DNA டெஸ்ட் நடத்த அனுமதி!

image

திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக <<18207032>>ஜாய் கிரிசில்டா<<>> தொடர்ந்த வழக்கில் சென்னை HC உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடலில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு (DNA) பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், பரிசோதனைக்கு பிறகு மத்தியஸ்தரிடம் அவர் அறிக்கையை சமர்ப்பிக்கவும் HC தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

News March 4, 2026

நிதிஷ்குமார் CM பதவியில் இருந்து விலகலா?

image

பிஹார் CM பொறுப்பில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அவர் ராஜ்யசபா MP தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்க்கு மத்தியில் முக்கிய அமைச்சரவை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமாருக்கு DCM பதவி வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது. பிஹார் அரசியலில் ஏற்பட உள்ள இந்த அதிரடி மாற்றங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

error: Content is protected !!