News April 10, 2024
உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். கைதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Similar News
News July 8, 2025
அன்புமணியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தனது மகள் காந்திமதியை, ராமதாஸ் மேடையில் அமர வைத்தது குறிப்பிடத்தக்கது.
News July 8, 2025
தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜூ!

இளம் சென்சேஷன் மமிதா பைஜூ தான் தற்போது பல முன்னணி நடிகர்களின் சாய்ஸ். ஜனநாயகன், சூர்யா 46, Dude என தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அடுத்த பெரிய புராஜெக்டையும் பிடித்து விட்டார். ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் தனுஷின் அடுத்த படத்தில் ஹீரோயினாக மமிதா கமிட்டாகி இருக்கிறார். இவுங்க ஜோடி எப்படி இருக்கும்?
News July 8, 2025
ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.