News September 3, 2025
திருமணத்துக்கு அரசே பணம் கொடுக்கும் செம்ம திட்டம்!

சாதி மறுப்பு திருமணங்களை செய்யும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு Dr.அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தில் ₹2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற, தம்பதியருள் ஒருவர் SC/ST-ஆகவும், மற்றொருவர் BC/MBC-ஆகவும் இருக்க வேண்டும். தம்பதியினரின் மொத்த ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், திருமணமான 1 ஆண்டுக்குள் ambedkarfoundation@nic.in -ல் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 7, 2025
BREAKING: தங்கம் யூனிட் ₹5,493 உயர்ந்தது

தங்க பத்திர திட்டத்தில் ஒரு யூனிட்டிற்கு ₹10,610 வழங்கப்படும் என RBI அறிவித்துள்ளது. 2020 – 2021 நிதியாண்டில் வெளியிடப்பட்ட தங்க பத்திர கணக்குக்கு முன்னதாகவே முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. 2020-ல் வெளியிடப்பட்ட விலையோடு(₹5,117) ஒப்பிடுகையில் 107.35%(₹5,493) லாபமாகும். கடந்த 3, 4, 5-ம் தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை கொண்டு, யூனிட் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக RBI தெரிவித்துள்ளது.
News September 7, 2025
உங்கள் உடல் உறுப்புகளுக்கு எதை பார்த்தால் பயம்?

நீங்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளால் உங்கள் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதன் பக்கவிளைவுகள் உடனடியாக காட்டாது என்பதால் நாம் ஆரோக்கியமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், 35 வயதுக்கு மேல் உங்களுக்கு அனைத்து உடல்நல பிரச்னைகளும் வரும். இதனை இப்போதே தடுக்க, உங்கள் உடல் உறுப்புகளை பாதிக்கும் விஷயங்கள் எவை என்பதை தெரிந்துகொண்டு அதை தவிர்த்துவிடுங்கள். SHARE.
News September 7, 2025
வாள்வீச்சில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை

பஹ்ரைனில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில், தமிழக வீராங்கனை கனகலட்சுமி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதில் குரேஷியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பிளாசிக் டோஜ்ரா தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்திற்கு உலக அரங்கில் பெருமை சேர்ந்த சிங்க பெண் கனகலட்சுமிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவித்து வருகின்றன. நீங்களும் வாழ்த்தலாமே!