News September 3, 2025
பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொன்னால் பரிசு நிச்சயம்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை மட்டும் பயன்படுத்தி வரும் உணவகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெரிய சிறிய என 2 உணவகங்களுக்கு பரிசுத்தொகையுடன் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு உரிமம் பெற்ற உணவக உரிமையாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
BREAKING: ஈரோடு அதிமுகவில் அடுத்தடுத்து நீக்கம்!

அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முன்னாள் எம்பி சத்தியபாமா, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான சத்தியபாமா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 7, 2025
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறிய 1,027 பேர் மீது வழக்கு

ஈரோடு மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம், மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 49 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 445 வழக்கு உள்பட, 1,027 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து, மது போதையில் வாகனம் ஓட்டிய, 25 பேரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தனர்.
News September 7, 2025
ஈரோடு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க