News September 3, 2025
மதிய உணவு சாப்பிட்டாச்சா… இதை பாருங்க!

மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் ‘Power Nap’ எனப்படும் குட்டித்தூக்கம் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது University college london நடத்திய ஆய்வுமுடிவு. இது ஞாபகசக்தியை மேம்படுத்தி, வேலையில் விழிப்புணர்வுடன் இருக்கவும் உதவுகிறதாம். இந்த குட்டித் தூக்கத்தால், இரவுத் தூக்கம் பாதிக்காதாம். ஆனால், இந்த Power Nap, 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இப்பவே, ஆபீஸ் டேபிளில் சாயத் தோணுதா?
Similar News
News September 3, 2025
GST 2.0: இந்த பொருள்களின் விலை உயரும்!

இன்றைய GST கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. அதன்படி *1200cc-க்கு அதிகமான கார்கள், 350cc-க்கு அதிகமான பைக்குகளுக்கு 40% வரிவிதிக்கப்படும். *₹40 லட்சத்திற்கு குறைவான EV கார்களுக்கு 18%, ₹40 லட்சத்திற்கு அதிகமான EV கார்களுக்கு 40% வரி. *நிலக்கரிக்கான வரி 5%-ல் இருந்து 18% ஆக உயர்வதால், மின்சார கட்டணம் உயரும். *பிராண்டட் ஜவுளி பொருள்களுக்கு 18%-ஆக வரி உயர்த்தப்படுமாம்.
News September 3, 2025
வைரஸ் பரவலுக்கு பயப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை

தமிழகத்தில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் பரவவில்லை எனவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 3, 2025
மிலாடி நபி விடுமுறை.. இன்று முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

மிலாடி நபி, வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு இன்று முதல் 5-ஆம் தேதி வரை 1,475-க்கும் அதிகமான பஸ்களும், 7-ஆம் தேதி பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 875 பஸ்களும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.