News September 3, 2025

EPSக்கு எதிராக அதிருப்தி குரல்கள்

image

EPS உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், பவானி MLA பண்ணாரி, தம்பி சுப்பிரமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சென்றனர். கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்த முன்னாள் MP சத்தியபாமாவும், செங்கோட்டையனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். EPS மீது அதிருப்தியில் இருக்கும் வேறு சிலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News September 5, 2025

₹22.08 லட்சம் கோடியாக உயர்ந்த GST வருவாய்

image

2024 – 2025 நிதியாண்டில் நாட்டின் மொத்த GST வருவாய் ₹22,08,861 கோடியை எட்டியுள்ளது. கடந்த 2023 – 2024 நிதியாண்டில் மொத்த GST வருவாய் ₹20,18,249 கோடி என இருந்த நிலையில், தற்போது உயர்ந்துள்ளது. ₹1,31,115 கோடி GST வருவாய் உடன் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் மஹாராஷ்டிரா – ₹3,59,855 கோடி, கர்நாடகா – ₹1,59,564 கோடி, குஜராத் – ₹1,36,748 கோடியுடன் உள்ளன.

News September 5, 2025

அண்ணாமலையும் வெளியேறுவார்: புகழேந்தி

image

EPS தலைமையை ஏற்றால் செங்கோட்டையனுக்கு டெபாசிட் போய்விடும் என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். TTV, OPS ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையும் பாஜகவை விட்டு வெளியே வருவார் என புகழேந்தி கூறியுள்ளார். ஆனால், கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை என்று <<17615829>>அண்ணாமலை<<>> விளக்கம் அளித்திருந்தார்.

News September 5, 2025

துலீப் டிராபி: ருதுராஜ், ஜெகதீசன் அதிரடி சதம்

image

துலீப் டிராபி தொடரில் மேற்கு – மத்திய மண்டல அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்களை விளாசி, தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நேர முடிவில் அந்த அணி 363/6 என எடுத்திருந்தது. இதனையடுத்து களம் கண்ட மத்திய அணியின் நாராயணன் ஜெகதீசன் 148 ரன்கள் விளாசி தொடர்ந்து களத்தில் உள்ளார்.

error: Content is protected !!