News September 3, 2025
அமித்ஷா ஆலோசனையில் பங்கேற்காத அண்ணாமலை

டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் நயினார், வானதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், அண்ணாமலை பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நிலவும் உள்கட்சி பிரச்னை, புதிய நிர்வாகிகள் நியமனம், NDA கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையில் அண்ணாமலை பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Similar News
News September 7, 2025
TECH: இத பண்ணுங்க.. இனி ஃபோன்ல விளம்பரம் வராது!

உங்கள் ஃபோனில் அடிக்கடி விளம்பரங்கள் வருவதால் கடுப்பா இருக்கா? இதில் பாதிக்கு பாதி விளம்பரங்கள் இனி உங்களுக்கு காட்டாத படி செய்யமுடியும். ➤Settings-க்கு சென்று Private DNS என தேடுங்கள் ➤அதில் Private DNS Provider Hostname-ஐ க்ளிக் செய்து அதில் ‘DNS.Adguard.com’ என Type செய்யுங்கள். இதை செய்தால் கூகுளில் வரும் விளம்பரங்கள், ஃபோனின் Wallpaper Section-ல் தோன்றும் விளம்பரங்கள் காட்டாது. SHARE IT.
News September 7, 2025
ரகசிய விடுமுறையில் ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மலேசியாவில் ரகசிய விடுமுறையை அனுபவித்து வருவதாக BJP IT பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் அரசியல் சூட்டில் இருந்து ஓய்வு எடுக்கவோ, அல்லது ரகசிய சந்திப்பிற்காகவோ காங்கிரஸ் இளவரசர் சென்றிருக்கலாம் என கிண்டலடித்துள்ளார். மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் அமித் மாளவியா சாடியுள்ளார். காங்., தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
News September 7, 2025
மாதம் ₹12,500 வழங்கும் தமிழக அரசு.. இந்த திட்டத்தை பாருங்க

நீயே உனக்கு ராஜா திட்டம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, சம்பளமும் தருகிறது தமிழக அரசு. இதற்கு, <