News September 3, 2025
நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த 28.08.2025 அன்று கார் ஓட்டிக்கொண்டு சென்றபோது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இந்த விபத்தில் கோவிந்தராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.
Similar News
News September 7, 2025
மருத்துவமனைக்கு சென்று MLA ஆறுதல்

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக பேருந்தில் பயணம் செய்தபோது அதிகாலையில் விபத்து ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், விருத்தாசலம் எம்எல்ஏ இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
News September 7, 2025
கடலூர்: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் வேலை!

கடலூர் மக்களே, காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
அண்ணாநகர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காட்டுமன்னார் கோயில் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டடத்தைத் திறந்து வைத்தார்.