News September 3, 2025
ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு நெருக்கடி.. தீவிர ஆலோசனை

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதனால், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்த நிலையில், SC-யின் தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை இன்று நடத்துகிறார்.
Similar News
News September 7, 2025
அடுத்த ஆக்ஷனில் இறங்கும் செங்கோட்டையன்?

அதிமுக ஒருங்கிணைப்புக்காக பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து EPS நீக்கியது பரபரப்பை கிளப்பியது. இதற்கு, பொறுப்பில் இருந்து நீக்கினாலும், கட்சியை ஒருங்கிணைக்கும் பணியை செய்வேன் என கூறியிருந்தார் செங்கோட்டையன். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் செப்.9-ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை செங்கோட்டையன் வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
News September 7, 2025
பெற்றோருடன் நேரம் செலவிட இனி அரசு விடுமுறை

அசாமில், பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் ‘Matri Pitri Vandana’ திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி நவ.14, 15-ம் தேதிகளில் ஊழியர்கள், தங்கள் சிறப்பு விடுமுறையை விதிகளுக்கு உள்பட்டு விண்ணப்பித்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் குடும்பத்துடனான பிணைப்பை அதிகரித்து, ஊழியர்கள் மன தெளிவுடன் பணிபுரிவர் என கூறப்படுகிறது. இதை தமிழகத்திலும் கொண்டு வரலாமா?
News September 7, 2025
மூலிகை: நன்மைகள் கொட்டி கிடக்கும் கரிசலாங்கண்ணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*கரிசலாங்கண்ணியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் இது வெளியேற்றும்.
*குழந்தைகளுக்கு 2 சொட்டு கரிசலாங்கண்ணிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும்.
*மஞ்சள் காமாலை போன்ற அனைத்து வகை காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்து. SHARE IT.