News September 3, 2025
தேனியில் நடைபெற உள்ள உடல் உறுப்பு தானம் முகாம்

தேனியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நாளை 04.09.2025 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உடல் உறுப்பு தான முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் மாவட்டத்தை சேர்ந்த உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 7, 2025
நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி வழிபாடு

தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி தினத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வண்ண பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டுச் சென்றனர்.
News September 7, 2025
தேனி: LIC வேலை.. நாளையுடன் கடைசி!

தேனி மக்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்(760), உதவி பொறியாளர் (81) பணிகளுக்கு மொத்தம் 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் <
News September 7, 2025
தேனி: உளவுத் துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!