News September 3, 2025
தர்மபுரி மாவட்டம் – செப்டம்பர் மாத மின்தடை அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர்-2025 மாதம் முழுவதும் திட்டமிட்ட நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும். மாவட்டத்தின் பல ஊரக, நகர்புற பகுதிகள் மின்தடைக்கு உட்படுகின்றன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News September 7, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.07) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மனோகரன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 6, 2025
அரூர்: உயர்கல்விக்கு சேராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில், 2022 முதல் 2025 வரை 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்விக்கு சேராத மாணவ, மாணவிகளுக்காக, தமிழக அரசின் ‘உயர்வுக்கு படி’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 8-ம் தேதி அன்று அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 6, 2025
காரிமங்கலம் மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (செப்.6) பார்வையிட்டார். அப்போது, அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.