News September 3, 2025
மத்திய அரசில் ₹1.40 லட்சம் சம்பளத்துடன் வேலை

தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் (NHPC) காலியாகவுள்ள ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 248 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: B.E., (சில பதவிகளுக்கு மாறுபடுகிறது). அதிகபட்சமாக 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹27,000 – ₹1.40 லட்சம். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.1. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News September 5, 2025
ராணி கேத்தரின் காலமானார்

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான கென்ட் சீமாட்டி என்று அழைக்கப்படும் கேத்தரின் (92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவர் அமைதியான முறையில் இயற்கை எய்தியதாக அரசக் குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனும், கென்ட் இளவரசருமான எட்வர்டை மணந்தவர் தான் கேத்தரின். பல அறப்பணிகளை இவர் செய்து வந்தார். RIP!
News September 5, 2025
Beauty: கரும்புள்ளிகளால் கவலையா? சரி செய்வது ஈஸி

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் காரணமாக சிலர் நம்பிக்கை இழக்கின்றனர். இதனை சரி செய்ய பல எளிய வழிகள் இருக்கின்றன. ➤எலுமிச்சை சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ➤தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி, காலையில் கழுவவும் ➤மஞ்சள் மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் போல கரும்புள்ளியில் தடவலாம். இதனை தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகள் நீங்கும் என கூறுகின்றனர். SHARE.
News September 5, 2025
பள்ளிக் கல்வித்துறை பாழடைந்துவிட்டது: அன்புமணி

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.