News September 3, 2025
குமரியில் இனி Whatsapp மூலம் தீர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
Similar News
News September 7, 2025
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் முன்பு இன்று தவெக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு கொண்டுவந்த மீனவர்களுக்கு எதிரான மீன்பிடி மசோதாவை திருப்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
News September 7, 2025
குமரி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

குமரி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறியலாம். SHARE IT
News September 7, 2025
குமரி: ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலை

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<