News April 10, 2024
‘வேட்டையன்’ படத்தில் ஃபகத் பாசில்?

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரை வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த ஃபகத் பாசில், முதல்முறையாக இந்தப் படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார். ஞானவேல் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இம்மாதத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்து அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
BREAKING: பாமக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ➤சேலம் மேற்கு, ➤சேலம் வடக்கு, ➤தருமபுரி, ➤பென்னாகரம், ➤சோளிங்கர், ➤காட்டுமன்னார்கோவில்(தனி), ➤மயிலாடுதுறை, ➤விக்கிரவாண்டி, ➤அம்பத்தூர், ➤திருப்போரூர், ➤உத்திரமேரூர், ➤போளூர், ➤விருத்தாசலம், ➤ஜெயங்கொண்டம், ➤ரிஷிவந்தியம், ➤செஞ்சி, ➤பெரம்பூர், ➤கீழ்வேளூர்(தனி) தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
BIG BREAKING: பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்

தேர்தலில் பாஜக போட்டியிட உள்ள 27 தொகுதிகள் விவரம்: மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, ஊட்டி, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், விளவங்கோடு, திருவண்ணாமலை, ஆவடி, தஞ்சை, அறந்தாங்கி, மானாமதுரை, குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம், ராதாபுரம், நாகர்கோவில், திருவாரூர், ராமநாதபுரம். <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
வீட்டு சமையல் சிலிண்டர்.. அரசு புதிய அறிவிப்பு

ஒரு வீட்டு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 25 நாள்களுக்கு பின்பும், 2 சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போர் 35 நாள்களுக்கு ஒருமுறையும் கேஸ் பதிவு செய்யலாம் என SM-ல் தகவல் பரவியது. ஆனால் இதை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மறுத்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தது போல் எந்த வகை இணைப்பாக இருந்தாலும் நகர்புறங்களில் 25 நாள்களுக்கு பிறகும், கிராமப் பகுதிகளில் 45 நாள்களுக்கு பிறகும் புதிய கேஸ் சிலிண்டரை பெறலாம் .


