News April 10, 2024
BREAKING : காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சம்பவம்

மதுரை, திருமங்கலத்தில் இன்று காலை கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது. சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய போது, கார் கவிழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 10, 2026
ஜன நாயகனில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா? அமீர்

கசித்திருக்கும் ஜன நாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தான் தங்களின் அரசியலா, எப்போது தான் மாறும் இந்த மனநிலை என அடுக்கடுக்கான கேள்விகளை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் எழுப்பியுள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட் வைரலான நிலையில், ஓர் இயக்குநரே லீக்கான காட்சியை பார்த்தது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News April 10, 2026
PM KISAN திட்டத்தின் ₹2,000.. மகிழ்ச்சியான அப்டேட் வந்தது

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) ஜூன் இறுதி (அ) ஜூலை தொடக்கத்தில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, விவசாயி அடையாள எண் (UNIQUE FARMER ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பெறாதவர்களுக்கு ₹2,000 நிறுத்தப்படலாம். மாநில அரசின் <
News April 10, 2026
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக TN மகிளா காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதற்கு தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதில் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார்கேவிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் கூறியுள்ளார்.


