News September 3, 2025
தவெக – காங்., கூட்டணி? செல்வப்பெருந்தகை மறுப்பு

2026 தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய கூட்டணியை அமைக்கும் முனைப்பில் தவெக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தவெக – காங்., இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படியான எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது பற்றி யாரும் தவெகவில் இருந்து பேசவில்லை என்ற அவர், காங்.,ன் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.
Similar News
News September 5, 2025
ராசி பலன்கள் (05.09.2025)

➤ மேஷம் – புகழ் ➤ ரிஷபம் – தெளிவு ➤ மிதுனம் – ஆக்கம் ➤ கடகம் – விவேகம் ➤ சிம்மம் – உயர்வு ➤ கன்னி – போட்டி ➤ துலாம் – தனம் ➤ விருச்சிகம் – அலைச்சல் ➤ தனுசு – பகை ➤ மகரம் – ஓய்வு ➤ கும்பம் – வரவு ➤ மீனம் – நன்மை.
News September 5, 2025
யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை: PM மோடி

விளையாட்டு நல்லது, ஆனால் சூதாட்டம் தவறானது என்ற விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என PM மோடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங்கை தடை செய்வதை வலிமை மிக்க சக்திகள் விரும்பாது எனவும், ஆனால் அதை எல்லாம் புறந்தள்ளி தங்களது அரசு ஆன்லைன் கேமிங்கை தடை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாமல், மக்கள் நலனிற்காக இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
LIC-ல் வேலைவாய்ப்பு… உடனே முந்துங்கள்

வேலை தேடி அலையுறீங்களா ? இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க. LIC நிறுவனத்தில் 884 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 514 உதவிப் பொறியாளர் மற்றும் 370 உதவி நிர்வாக அலுவலர் பணியிடங்கள் அடங்கும். இதற்கு நீங்கள் டிகிரி முடித்த, 21-30 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும். வரும் 8ஆம் தேதிக்குள் https://licindia.in/தளத்தில் விண்ணப்பியுங்கள். அக்.3 Prelims நடைபெறவுள்ளது.