News September 3, 2025
BREAKING: பொன்னேரியில் கொலை

பொன்னேரி அருகே அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று காலை பொன்னேரி அரசு பேருந்து பணிமனை அருகேயுள்ள சுடுகாட்டில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News September 7, 2025
டிப்பர் லாரி மோதி சிறுமி பலி

பூந்தமல்லி போரூரை கணேஷ் என்பவரின் மகள் யோகஸ்ரீ (வயது 10) தனது உறவுக்கார பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் போரூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சாலையில் தடுமாறி விழுந்தனர். இதில் யோகஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற மற்றொரு சிறுமி மற்றும் உறவுக்கார பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News September 7, 2025
ஆவடியில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்

ஆவடி மாநகராட்சி, ப்ளூ க்ராஸ் ஆப் இந்தியா மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, நாய்களுக்கு இலவச தடுப்பூசி & மருத்துவ முகாமை இன்று (செப்.,7) நடத்துகிறது. இந்த முகாமானது திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு மண்டல வரி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் மூலம் ரேபிஸ் பரவுவதை தடுக்க இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
News September 7, 2025
திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செப்.,6) இரவு 10 மணி முதல் இன்று (செப்.,7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.