News September 3, 2025
விஜய்யுடன் இணைய போகும் 3 முக்கிய தலைவர்கள்?

சசிகலா, OPS-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சி மேற்கொண்டதால்தான் செங்கோட்டையன் – EPS இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. EPS விடாப்பிடியாக இருப்பதால் மீண்டும் இணைப்புக்கு சாத்தியமில்லை என தெரிகிறது. ஏற்கெனவே TTV, OPS ஆகியோர் தவெகவுடன் கூட்டணி செல்லலாம் என பேசப்படுகிறது. செங்கோட்டையனும் விஜய்யுடன் இணைந்தால், கொங்கு, தென்மாவட்டங்களில் தவெக பலம்பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 21, 2026
டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட மநீம விருப்பம்

மநீமவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி உதய சூரியனில் போட்டியிட திமுக கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், 6 தொகுதிகளை கேட்கும் மநீம, டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று சொல்வதால், பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில் கமல் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 100% டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுமாறு கமலிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 21, 2026
கேஸ் சிலிண்டர் புக்கிங் குறைந்தது: மத்திய அரசு

நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு பதற்றத்தால் அதிகரித்த முன்பதிவுகள் இப்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிவாயு முன்பதிவுகள் 89 லட்சத்திலிருந்து 55 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும், போதுமான சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சந்தை விற்பனையும் முழுமையாக தடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
News March 21, 2026
திமுக கூட்டணியில் தொடர்வதா? CPM ஆலோசனை

அவசர மாநில செயற்குழு கூட்டத்தை இன்று காலை CPM நடத்துகிறது. இதில் திமுகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீடு இழுபறி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா, அல்லது வேறு முடிவு எடுக்கலாமா என்றும் விவாதிக்கப்பட உள்ளதாம். திமுக 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வருவதால் CPM அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


