News September 3, 2025
நோய்களை விரட்டும் இஞ்சி `ஹெர்பல் டீ’

தினசரி இஞ்சி டீ குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதிலுள்ள ஃபைடோநியூட்ரின்ட்ஸ் & ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் & அழற்சிகள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், கல்லீரல் பிரச்னைகள் & ஆஸ்துமா பாதிப்புகளை தணிக்கும். சளி, சைனஸ் தொந்தரவுகள், தொண்டை புண் ஆகியவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும். SHARE IT.
Similar News
News September 5, 2025
ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்த PM

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயெனுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும், அந்த 2 ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு வருமாறு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
News September 5, 2025
மாதம் ₹12,400 உதவித்தொகை.. உடனே அப்ளை பண்ணுங்க

2025-26 கல்வியாண்டில் ME, MTech, M.Design படிப்புகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை AICTE வெளியிட்டுள்ளது. மாணவர்களின் GATE/CEED ஸ்கோர் அடிப்படையில் மாதந்தோறும் ₹12,400 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் பயிலும் நிறுவனங்களில் ID பெற்று, டிசம்.15க்குள் <
News September 5, 2025
வடகொரியா தோன்றியது முதல் ஆளும் ஒரே குடும்பம்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவில் நேற்று நடந்த வெற்றி தின அணிவகுப்பில் தனது மகள் கிம் ஜூ-ஏ உடன் கலந்து கொண்டார். இதன்மூலம், வடகொரியாவின் வருங்கால அதிபர் கிம் ஜூ – ஏ தான் என பரவலாக பேசப்படுகிறது. இப்படி பேசப்படுவதற்கு முக்கிய காரணமும் உள்ளது. வடகொரியா என்ற நாடு தோன்றியது முதல் கிம் குடும்பம் தான் தொடர்ச்சியாக அந்நாட்டை ஆண்டு வருகிறது. அதன் வரலாற்றை மேலே Swipe செய்து அறிந்து கொள்ளுங்கள்.