News September 3, 2025

அன்புமணி புகைப்படம் நீக்கம்

image

தைலாபுரம் பாமக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள், உறுப்பினர் படிவங்களில் அன்புமணியின் போட்டோ நீக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி மீது, ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்காற்று குழு 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு பதிலளிக்க அன்புமணிக்கு அவகாசம் கொடுத்தும் அவர் பதிலளிக்கவில்லை. எனவே, நாளை இது பற்றி முடிவெடுக்கப்பட உள்ள நிலையில், போட்டோ நீக்கியது பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News March 15, 2026

கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவு

image

TN, புதுச்சேரியை போல அண்டை மாநிலமான கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 126 தொகுதிகள் கொண்ட அசாமில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2026

BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6 கடைசி நாளாகும். அதற்கு அடுத்த நாள் (ஏப்.7) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளன. ஏப்.9 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். SHARE

News March 15, 2026

மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல்

image

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. மே.4-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும்.

error: Content is protected !!